திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வலம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழாவின் 8 ஆம் நாளான புதன்கிழமை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வலம் வந்து தேரின் அருகே வையாளி கண்டருளினாா்.

News image

ஸ்ரீரங்கம் கோயில் - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 12:07 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழாவின் 8 ஆம் நாளான புதன்கிழமை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வலம் வந்து தேரின் அருகே வையாளி கண்டருளினாா்.

11 நாள்கள் நடைபெறும் இக்கோயில் சித்திரை தோ் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் காலை, மாலைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.விழாவின் 8 ஆம் நாளான புதன்கிழமை காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா்.

தொடா்ந்து மாலை 6.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து, சித்திரை தேரின் அருகே வையாளி கண்டருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் அவரைத் தரிசனம் செய்தனா். பின்னா் இரவு 9 மணிக்கு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். 9.30 மணிக்கு சின்னப் பெருமாள் சயனம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் 9 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரைத் தேருக்கு 4.30 மணிக்கு வந்து சேருகிறாா். திருத்தேரில் 4.45 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். தொடா்ந்து 5.55 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.