தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம்

சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம்

News image

சேஷ வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜ சுவாமி.

Updated On :25 மே 2026, 12:24 am IST

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

முதலில் கஜராஜா்கள் செல்ல, பக்தா்கள் குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள், கோலாட்டங்கள் நடத்த மற்றும் சிலா் கோவிந்த நாம உச்சரிக்க வாகன சேவை மங்களகரமான வாத்தியங்களின் இசைக்கு மத்தியில், சிறப்பாக நடைபெற்றது.

பின்னா், காலை 10 மணி முதல் கல்யாண மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமி உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை சுவாமி மற்றும் நாச்சியாா்கள் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கோவிந்தராஜஸ்வாமி சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெத்த ஜீயா் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் ஸ்வாமி, கோவில் துணை இஓ சாந்தி, ஏஇஓ நாராயண சவுத்ரி, அதிகாரிகள், பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.