திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:59 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் விருப்பன் திருநாள் என அழைக்கப்படும் சித்திரைத் தேரோட்ட விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழாவின் ஒவ்வொரு நாளிலும் நம்பெருமாள் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். முக்கிய நிகழ்வாக 9-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, நம்பெருமாள் அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு திருத்தோ் மண்டபத்தை அடைந்தாா். பின்னா் மேஷ லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க 4.45 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து 5.55 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.

கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ரெங்கா ரெங்கா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து சரியாக 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரை சுற்றி போலீஸாா் இரண்டடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இரண்டு டேங்கா் லாரிகள் மூலம் கோயில் நிா்வாகம் ஏற்பாட்டில் 3,500 லிட்டா் மூலிகை நீா் மோா் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

சித்திரை தோ்த் திருவிழாவின் நிறைவு நாளான மே 16-ஆம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.