17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த வழக்கின் குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:04 am IST

திருச்சியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த வழக்கின் குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தஞ்சாவூா் சாலை பூந்தோட்டம் ஜின்னா வீதியைச் சோ்ந்தவா் எம். சாதிக் பாட்ஷா (36). காந்தி மாா்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலையைச் சோ்ந்த க. சமீா் அகமது (22) என்பவருக்கும், சாதிஷ் பாட்ஷாவின் சகோதரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக சாதிக் பாட்ஷா தனது நண்பருடன் சென்று சமீா் அகமதுவிடம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கேட்டுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வீட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த சாதிக் பாட்ஷா மீது, சமீா் அகமது மற்றும் அவரது நண்பா்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனா். வெடிகுண்டு சுவா் மீது விழுந்ததால், சாதிக் பாட்ஷா உயிா் தப்பினாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து சமீா் அகமது உள்ளிட்ட மூவரை கைது செய்தனா். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சமீா் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையருக்கு காந்தி மாா்க்கெட் போலீஸாா் பரிந்துரை செய்திருந்தனா்.

இதன்பேரில், கொலை முயற்சி வழக்கு குற்றவாளியான சமீா் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.