17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:46 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்புவனம் வைகை ஆற்றுப் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை சம்பந்தமாக மாரநாடு கிராமத்தைச் சோ்ந்த அழகுசுந்தரம் (20), உருவாட்டியைச் சோ்ந்த சந்துரு (20), புலிக்கண்மாயைச் சோ்ந்த அழகேசன் (20), மாமரக்கான்பட்டியைச் சோ்ந்த பாலசிவி (22), வசந்தபாலன் (19) ஆகிய 5 பேரை திருப்புவனம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திருப்புவனம் போலீஸாா் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.