கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடியேறும் குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்துமா!

மூச்சுத்தடை நோய் எனப்படும் ஆஸ்துமா  பாதிப்பைக் கண்டறிந்து,  சரியான உடனடி சிகிச்சை மூலம் தாக்கத்தை முழுமையாக சரி

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:54 pm

கு. வைத்திலிங்கம்

மூச்சுத்தடை நோய் எனப்படும் ஆஸ்துமா  பாதிப்பைக் கண்டறிந்து,  சரியான உடனடி சிகிச்சை மூலம் தாக்கத்தை முழுமையாக சரி செய்யலாம். ஆஸ்துமாவுக்குத் தொடர் சிகிச்சை அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஈழை நோய் அல்லது மூச்சுத்தடை நோய் எனப்படும் ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த, நாள்பட்ட அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தல் அல்லது விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல் அல்லது மூச்சிரைப்பு நிலையாகும்.
சுவாசக் குழாய்களின் உள்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உள்சென்று வெளியேறும்பாதையில் ஒடுக்கமேற்பட்டு காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட  சுருக்கம் மற்றும் இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் அழற்சியினால் ஏற்படும் புண்பட்டநிலை, வீக்கம் போன்றவையும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். உலக சுகாதார நிறுவன ஆய்வறிக்கையின்படி உலகளவில் சுமார் 300 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். இதில், 15 முதல் 20 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  கிராமப்புங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு  குடியேறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்குத்தான் ஆஸ்துமா நோய் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஜினியா என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை 400 மில்லியனாக உயரக்கூடும் என்றும், இதில் 10 சதவிகித்தினர் இந்தியர்களாக இருப்பர்.  5 வயதுக்கு குறைவாக குழந்தைகளில் 74 சதவிகிதம் பேரும்,   1 வயதுடைய குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு 24 சதவிகிதமாகவும் உள்ளது.
2.50 லட்சம் ஆஸ்துமா நோயாளிகள் ஆண்டுதோறகும் உருவாகுவதாக கூறும் உலக சுகாதார நிறுவனம், 2004 ஆம் ஆண்டின் ஆய்வின்படி  ஆண்டுக்கு 57,000 பேர் இறப்பதாகவும்,   1 லட்சம் மக்கள் தொகையில்  5 சதவிகிதப் பகுதியினர்  ஆஸ்துமா நோயால் இறப்பதாகவும்  ஆய்வறிக்கை விவரங்கள் தெரிவிக்கின்றன. 
விழிப்பு நிலையில் மாற்றம், மூச்சு எடுக்க முடியாமை,  பேச்சு வெளிப்படும் முறையில் மாற்றம், மூச்சிறைப்பு,  துணை தசைகளின் உபயோகம் அதிகமாகுதல், சுவாச வீதம், நாடித்துடிப்பு நிமிடத்துக்கு அதிகமாகுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும். சரியான உடனடி சிகிச்சை மூலமாக ஆஸ்துமா தாக்கத்தை முழுமையாக சரி செய்யலாம்.  அதே நேரத்தில் இந்த நோய்க்குத் தொடர் சிகிச்சை தேவையானதாகும்.
மே முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா தினம்: "" ஒவ்வொரு ஆண்டும் மே மாத முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில் மே மாதம் பிறப்பே செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவதால் ஆஸ்துமா தினம் அன்றே கடைப்பிடிக்கப்படுகிறது.
நோயின் தீவிரத்தன்மை:   ஆஸ்துமா நோயை இடைவிட்டு நிகழ்தல், லேசாக தொடர்ந்து இருத்தல்,  மிதமாக தொடர்ந்து இருத்தல், நோயின் தீவிர தன்மை தொடர்ந்து இருத்தல் ஆகியவையாக வகைப்படுத்தலாம்.  இரவில் இருமல் அதிகரித்தல்,  உடலில் இருமலும், மூச்சிறைப்பும் அதிகரித்தல்,  அதியுயர் வெளிமூச்சு ஓட்டவிகிதம் குறைதல், முறையற்ற தூக்கத்தில் எழும்போது களைப்பை உணர்தல் போன்றவற்றின் மூலமாக நோய் தீவிரம் அடைதலை உணரலாம்.
தொடர்ந்து நீர் மூக்கில் ஒழுகுதல், கண்களின் அடிப்பகுதியில் கருவளையம், தோல் அரிப்பு போன்ற ஒவ்வாமைகளின் அறிகுறிகள் காணப்படலாம். 
இந்த நோய் தீவிரமடைந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது நெஞ்சு  இறுக்கம், தீவிரமான,  நீடித்த இருமல், இறுகிய மூச்சு, மூச்சிறைப்பு, இவற்றால் நோயாளி  மூச்சிறைப்பினால் உண்டாகும் சப்தத்தை தானாகவே கேட்கும் நிலை உருவாகுதல், இரவு பகல் தொடர்ச்சியாக இருமல் இருத்தல்,  தூக்கமின்மை- ஓய்வெடுக்க முடியாத நிலை,  அதியுயர் மூச்சு ஓட்டமுறையில்  ஆபத்தின் நிலை ஏற்படுதல்  காணப்படலாம் என்கிறார்''  சுவாசம்- தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி நிலையத்தின் நிறுவனர் மருத்துவர் ஜி.கமல்.
மூச்சை அடக்கி சிறிது நேரம் கழித்து விடும் தியானப்பயிற்சி  தொடர்ந்து பெருமூச்சு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியும். ஆஸ்துமா நோயாளிகள் மற்ற நோய்களுக்கு மருந்து எடுப்பதில் பிரச்னை இல்லை.   சில நோய்களுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட சில மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.  
மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொள்வதுடன், தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதும் நலன் பயக்கும் என்கிறார் மருத்துவர் 
ஜி. கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.