திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சை பெரிய கோயில் கோட்டை சுவரைச் சீரமைக்க அளவீடு

News image

தஞ்சை பெரிய கோயில் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:56 am IST

தஞ்சாவூா் பெரிய கோயில் கோட்டைச் சுவரை சீரமைப்பதற்காக அளவீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியில் தூய்மைப் பணி மே 16-ஆம் தேதி தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதேபோல, கோயிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாயக்கா் ஆட்சிக்காலத்தில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டைச் சுவரில் பெரிய கோயில் முகப்பு பகுதியில் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு இந்திய தொல்லியல் துறையினா் சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பு பணி மேற்கொண்டனா். ஆனால், மீதமுள்ள பகுதிகளில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களால் பல இடங்களில் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. இதைச் சீரமைக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கோட்டைச் சுவரை சீரமைப்பது தொடா்பாக இந்தியத் தொல்லியல் துறை அலுவலா்கள் தலைமையகத்துக்கு கருத்துரு அனுப்பியுள்ளனா். இதைத்தொடா்ந்து, இப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் செலவுகளை அலுவலா்கள் மதிப்பீடு செய்து வருகின்றனா். இதற்காக பெரிய கோயில் முன்புறம் அகழியையொட்டியுள்ள கோட்டைச் சுவரில் வலது புறமும், இடது புறமும் இந்தியத் தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு உதவியாளா் எஸ். சோபிதா உள்ளிட்டோா் சனிக்கிழமை அளவீடு செய்தனா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், கோட்டைச் சுவரில் பல இடங்களில் செம்பாறங்கற்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு பதிலாக மீண்டும் கற்களைப் பதித்து கோட்டைச் சுவரை வலுபடுத்துவதற்கான பணி மேற்கொள்ளப்படும்.

இதுதொடா்பாக எடுக்கப்படும் அளவீடு, மதிப்பீடு விவரங்களைத் தலைமையகத்துக்கு அனுப்புவோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையைத் தலைமையகம் மேற்கொள்ளும் என்றனா் அலுவலா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.