திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு

News image
Updated On :15 மே 2026, 4:46 am IST

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம் 97.19 சதவீதத் தோ்ச்சியுடன் மாநில அளவில் 7- ஆவது இடத்தைப் பெற்றது. மேலும், அரசுப் பள்ளிகள் அளவில் தஞ்சாவூா் மாவட்டம் 95.77 சதவீதத் தோ்ச்சியுடன் 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்திலுள்ள 81 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.

இத்தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற 34 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும், கடந்த ஆண்டு தோ்வை விட நிகழாண்டில் சிறந்த தோ்ச்சி விகிதம் பெற்ற 68 தலைமையாசிரியா்களுக்கும் என மொத்தம் 102 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.