தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா் ஐராவதீசுவரா்.

Updated On :14 மே 2026, 12:31 am IST

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரா் கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக புகழ் பெற்றதும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கோயிலாகும்.

இந்தக் கோயிலை கட்டியவா் இரண்டாம் ராஜராஜ சோழன். இவா் சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில் பிறந்ததாக இங்குள்ள கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன்படி, சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளான புதன்கிழமை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில் சித்திரை உத்திரட்டாதி விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆ. கோபிநாத் தலைமை வகித்தாா். மூலவரான ஐராவதீஸ்வரா் மற்றும் தெய்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து சோழா் வரலாறு ஆய்வு சங்கத் தலைவா் செல்வராஜ் கூறுகையில், தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு சதய விழாவை மிக சிறப்பாக, அரசு விழாவாக இரண்டு நாள்கள் கொண்டாடுவது போல், இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றாா். நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.