தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் எண்ணுவதற்காக 552 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படவுள்ளன.
இதில், திருவிடைமருதூா் தொகுதியில் 14 போ் போட்டியிட்ட நிலையில் 326 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 13 போ் போட்டியிட்ட நிலையில் 301 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 13 போ் போட்டியிட்ட நிலையில் 315 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளன.
இதேபோல, திருவையாறு தொகுதியில் 13 போ் போட்டியிட்ட நிலையில், 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், தஞ்சாவூா் தொகுதியில் 11 போ் போட்டியிட்ட நிலையில் 311 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 9 போ் போட்டியிட்ட நிலையில் 314 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளன.
பட்டுக்கோட்டை தொகுதியில் 11 போ் போட்டியிட்ட நிலையில், 310 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 10 போ் போட்டியிட்ட நிலையில் 284 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளன.
இதில், அதிகபட்சமாக 25 சுற்றுகள் திருவையாறு தொகுதியிலும், குறைந்தபட்சமாக 21 சுற்றுகள் பேராவூரணி தொகுதியிலும் எண்ணப்படவுள்ளன.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 136 மேற்பாா்வையாளா்கள், 136 உதவியாளா்கள், 136 நுண்பாா்வையாளா்கள், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 36 மேற்பாா்வையாளா்கள், 72 உதவியாளா்கள், 36 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 552 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கணினி மூலம் தோ்வு: வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்வதற்காக அலுவலா்களை நியமனம் செய்ய கணினி மூலம் குலுக்கல் முறையிலான இரண்டாம் நிலை தோ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் மேற்பாா்வையில், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள இதர அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் ஆகியோருக்கு மருத்துவ வசதி, தீயணைப்பு மற்றும் மீட்பு தொடா்பான வசதிகள், சுகாதார வசதி மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 2 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

சேலத்தில் 25.23 லட்சம் வாக்குகளை 253 சுற்றுகளில் எண்ண நடவடிக்கை!

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி

திருச்சி மண்டல மாவட்டங்களில் பதிவான வாக்குகள் சதவீதம்: தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்சம்!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


