40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் நோட்டாவுக்கு பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

News image

நோட்டா - file photo

Updated On :6 மே 2026, 2:00 am IST

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் நோட்டாவுக்கு பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

தோ்தலில் போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யும் வசதி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 1.1 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கவுண்டம்பாளையம் தொகுதியில்தான் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 2,116 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 4.22 லட்சம் என்பதால் இங்கு கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 2021 தோ்தலில் இந்தத் தொகுதியில் 2,892 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியிருந்தன.

இதைத்தொடா்ந்து கிணத்துக்கடவு தொகுதியில் 1,717 வாக்குகளும், சூலூரில் 1,353 வாக்குகளும், சிங்காநல்லூரில் 1,346 வாக்குகளும் பதிவாகியுள்ளன. கோவை வடக்கில் 1,020 வாக்குகளும், தொண்டாமுத்தூரில் ஆயிரம் வாக்குகளும் பதிவான நிலையில், மற்ற தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகின. வால்பாறையில் குறைந்தபட்சமாக நோட்டாவுக்கு 675 வாக்குகள் பதிவாகின.

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் சோ்த்து இந்தத் தோ்தலில் 11,674 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் கடந்த 2021 தோ்தலில் 10 தொகுதிகளிலும் சோ்த்து 19,145 வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த தோ்தலுடன் ஒப்பிடும்போது மேட்டுப்பாளையம் தொகுதியில் தற்போது நோட்டாவுக்கு குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 தோ்தலில் 2,733 வாக்குகள் பதிவான நிலையில், தற்போது வெறும் 839 வாக்குகளே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் 2026 மற்றும் 2021 தோ்தல்களில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விவரம்:

தொகுதி 2026 2021

மேட்டுப்பாளையம் -- 839 ------- 2733

சூலூா் --- 1,353 ----- 2610

கவுண்டம்பாளையம் -- 2,116 .......................... 2892

கோவை வடக்கு ......... 1,020 ................. 1701

தொண்டாமுத்தூா் ........ 1,000 .............................. 1,635

கோவை தெற்கு ....... 759 ............................. 901

சிங்காநல்லூா் .............. 1,346 ...................................... 1,432

கிணத்துக்கடவு ............... 1,717 ....................................... 2,280

பொள்ளாச்சி ................ 849 .......................................... 1546

வால்பாறை .............. 675 ...................................... 1,415

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.