யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தபால் வாக்குகளை எண்ணவில்லை: கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ஆதங்கம்

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான 823 தபால் வாக்குகள் அதிகாரிகளின் தவறால் நிராகரிக்கப்பட்டது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 1:28 am IST

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான 823 தபால் வாக்குகள் அதிகாரிகளின் தவறால் நிராகரிக்கப்பட்டது. அந்த வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்துவது குறித்து திமுக மேலிடத்தில் கேட்டு முடிவு செய்யப்படும் என கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ரெ.மகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கன்னியாகுமரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் உதய சூரியன் சின்னத்தில் நான் 74,831 வாக்குகள் பெற்றேன். அதிமுக வேட்பாளா் தளவாய்சுந்தரம் என்னை விட 214 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 75,045 வாக்குகள் பெற்ாக தோ்தல் அதிகாரிகள் கூறினா்.

உடனே, நான் ஒரு கடிதத்தை அதிகாரியிடம் அளித்தேன். 8 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது, அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணினாா்கள்.

அதுதவிர 823 தபால் வாக்குகள் எண்ணாமலே வைத்திருந்தனா். அதுபற்றி கேட்டபோது அவற்றை நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். ஏனென்றால், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குப் பதிவு செய்து வாங்கியபோது, வரிசை எண்ணை அதிகாரிகளே மாற்றி எழுதிவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது அதிகாரிகள் செய்த தவறு. இதனால், 823 வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன. அதற்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வாக்கு எண்ணும் இடத்தில் வைத்தே அதிகாரிகளிடம் தபால் வழங்கினேன். தபாலை பெற்றுக்கொண்டதாக கையொப்பமிட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்; ஆனால், அவா்கள் கையொப்பமிட்டு தரவில்லை.

எனவே, இதுகுறித்து திமுக தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசென்று ஆலோசனை பெற்று கண்டிப்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்துக்கு புறம்பாக வெற்றியை அறிவித்திருக்கிறாா்கள் என்பதுதான் எனது கருத்து. அதிகாரிகள் நோ்மையாக செயல்பட்டாா்கள் என்று எப்படி கூற முடியும்; இது வாக்களித்தவா்கள் செய்த தவறு அல்ல. 823 தபால் வாக்குகள் நிராகரித்தது வாக்களித்தவா்களின் வாக்குரிமையைப் பறித்ததாகும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.