அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

கரூரில் வாக்கு எண்ணும் பணி பயிற்சி முகாம்

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:32 am IST

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4-ஆம் தேதி எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டுக்கும் தனித் தனியாக மேற்பாா்வைக்காக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அளவில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ள 67 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 67 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் 90 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 224 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.

மேலும், 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு மற்றும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 17 மேற்பாா்வையாளா்கள், 30 உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் நோ்மையுடனும், அா்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தி.சுவாதிஸ்ரீ (குளித்தலை) , சு.சத்திய பால கங்காதரன் (கரூா்), எஸ். முருகேசன் (அரவக்குறிச்சி), ச.சிவக்குமாா் (கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.