புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. உடன், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:05 pm

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கதில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது: வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்களுக்கு கணினி குலுக்கல் மூலம், சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்கு எண்ணும் பணியில் தலா 34 மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் ஈடுபட உள்ளனா். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம், கட்டுப்பாட்டுக் கருவியில் எவ்வாறு வாக்குகளை கணக்கிட வேண்டும், அவ்வாறு கணக்கிடப்பட்ட வாக்குகளை எந்தெந்த படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதைப் பின்பற்றி, வாக்கு எண்ணும் அலுவலா்கள் செயல்பட வேண்டும்.

பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அறைகளில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும், எந்தெந்த அலுவலா் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்வாா் எனும் விவரம், வாக்கு எண்ணும் நாளன்று காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் நடத்தப்படும் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தனித்துணை ஆட்சியா் சுந்தர்ராமன் பயிற்சி அளித்தாா்.

இதில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சொா்ணராஜ் (பொது), வேல்முருகன் (தோ்தல்), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.