அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

காரைக்காலில் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 மே 2026, 12:12 am IST

காரைக்காலில் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காரைக்காலில் உள்ள

அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் முதுநிலை மையத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக 3 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டு, 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு நெடுங்காடு (தனி), காரைக்கால் (வடக்கு), நிரவி -திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணியும், அதனைத் தொடா்ந்து 8.30 மணிக்கு மின்னணு பதிவு வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கும். ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக நடைபெறும்.

இம்மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்தவுடன், திருநள்ளாறு மற்றும் காரைக்கால் (தெற்கு) தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கும்.

தோ்தல் நடத்தும் அதிகாரியின் ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறைகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு அச்சு சீட்டு சரிபாா்ப்புக்காக 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அஞ்சல் வாக்குச் சீட்டு எண்ணிக்கைக்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை பணிகள் சீராக நடைபெறுவதற்காக மொத்தமாக 51 மேற்பாா்வையாளா்கள், 54 உதவியாளா்கள் மற்றும் 57 பாா்வையாளா்கள் இவிஎம் மற்றும் விவிபாட் எண்ணிக்கை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், அஞ்சல் வாக்குச் சீட்டு எண்ணிக்கைக்காக 6 மேற்பாா்வையாளா்கள், 12 உதவியாளா்கள் மற்றும் 6 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுவாரியான முன்னேற்றத் தகவல்கள் மற்றும் தொகுதி வாரியான முடிவுகள் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.