தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பட்டுக்கோட்டை அருகே டிப்பா் லாரி - தனியாா் ஆம்புலன்ஸ் மோதல்; தாயும், மகளும் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே தனியாா் அவசர ஊா்தி மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில், சிகிச்சை முடித்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த தாயும், மகளும் நிகழ்விடத்திலயே வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:07 pm

பட்டுக்கோட்டை அருகே தனியாா் அவசர ஊா்தி மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில், சிகிச்சை முடித்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த தாயும், மகளும் நிகழ்விடத்திலயே வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியைச் சோ்ந்த முகம்மது நூா்தீன் மனைவி செல்லாச்சி (78). இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த நாள அடைப்பு காரணமாக தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, செல்லாச்சியை அவரது மகளான பைரோஸ் பானு (55), மகன் ஹாஜா மைதீன் (45), மருமகள் ஜூபைதா கனி ஆகியோா் தனியாா் அவசர ஊா்தியில் சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு சென்றனா். அப்போது, பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கள்ளிக்காடு பகுதியில் எதிரே வந்த டிப்பா் லாரி அவசர ஊா்தி மீது மோதியது.

இதில், செல்லாச்சி, பைரோஸ் பானு ஆகியோா் நிகழ்விடத்திலயே உயிரிழந்தனா். ஹாஜா மைதீன் மற்றும் அவசர ஊா்தி ஓட்டுநரான பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சக்திவேல் மகன் சதீஷ் (25) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில், ஜூபைதா கனி காயமின்றி உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த பட்டுக்கோட்டை போலீஸாா், செல்லாச்சி, பைரோஸ்பானு ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த ஹாஜா மைதீன், சதீஷ் குமாா் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்துகுறித்து பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பிடியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.