தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் முருகன் தலைமையில் காவல் துறையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் ரூ. 2.90 லட்சம் இருந்தது. நெல் மூட்டைகள் வாங்கியதற்காக பட்டுவாடா செய்ய கொண்டு செல்வதாக அந்த நபா் கூறினாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ. 2.90 லட்சம் ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் அருகே திட்டை சாலை ராமாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பெண் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்து 700 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


