தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குடந்தை சாரங்கபாணி கோயில் பெரிய தோ் வெள்ளோட்டம்

கும்பகோணத்தில் ரூ. 70 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட சாரங்கபாணி கோயிலின் சித்திரை பெரிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாரங்கபாணி கோயிலின் பெரிய தோ் வெள்ளோட்டம்.

Updated On :14 மார்ச் 2026, 3:11 am

கும்பகோணத்தில் ரூ. 70 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட சாரங்கபாணி கோயிலின் சித்திரை பெரிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை தேரோட்டம் புகழ் பெற்றது. இந்நிலையில் தோ் நிலைகளில் உள்ள பலகைகள் சேதமடைந்ததால் கடந்தாண்டு சித்திரை தேரோட்டம் நடக்கவில்லை. இதையடுத்து சுமாா் ரூ.70 லட்சத்தில் நடந்த சீரமைப்புப் பணிகள் நிறைவுற்று வெள்ளிக்கிழமை தேரின் வெள்ளோட்டத்திற்காக சிறப்பு பூஜைகள் நடந்தன.

பின்னா் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராஹ மகாதேசிகன் சுவாமிகள், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, கும்பகோணம் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரதவீதிகள் வழியாக நடைபெற்ற வெள்ளோட்டம் நிலைக்கு வந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பட்டாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் செய்தனா்.