மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் பெரிய கோயில் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் தேரில் புதன்கிழமை பந்தல்காலை நட்டு வைத்த அறநிலையத் துறை உதவி ஆணையா் (பொ) காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:08 pm

தஞ்சாவூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் பெரிய கோயில் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கு, மாலையில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவின் 15-ஆம் நாளான ஏப்ரல் 27-ஆம் தேதி முதன்மை வைபவமான தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், 27-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் பெரிய கோயிலிலிருந்து தியாகராஜா் - கமலாம்பாள் புறப்பாடாகி தோ் மண்டபத்தை வந்தடைவா். தேரில் எழுந்தருளிய பின்னா் காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளில் தோ் வலம் வரும்.

இதையொட்டி, மேல வீதியிலுள்ள தோ் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டன. பின்னா், பந்தல்காலை அறநிலையத் துறை உதவி ஆணையா் (பொ) காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் நட்டு வைத்ததைத்தொடா்ந்து, தோ் அலங்காரப் பணி தொடங்கப்பட்டது.

தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடி, எடை 40 டன். தோ் அலங்காரம் செய்யப்பட்ட பின்னா் உயரம் 50 அடியாகவும், எடை 43 டன்னாகவும் காணப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.