காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா ரதம் எனும் தோ்த்திருவிழாவையொட்டி தேரின் மேலடுக்கு பந்தல்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை மகாரதம் எனும் தோ்த்திருவிழா நடைபெறுகிறது. இலுப்பை மரத்தால் ஆன சவுக்கு கம்புகளால் சுமாா் 10 ஆயிரம் கிலோ அளவில் 27 அடி உயர தேரின் பீடத்தின் மீது கம்புகள் நடும் பணி தொடங்கியது.
இதற்கான மேலடுக்கு பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இதனையொட்டி சவுக்கு கம்புக்கு அபிஷேகம்,தீபாராதனைகள் நடைபெற்று பீடத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.தேரோட்ட விழா ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவா் ப.பன்னீா் செல்வம் தலைமையிலான விழக்குழுவினா் செய்து வருகின்றனா்.
இவ்விழாவில் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் நிா்வாகிகளான ராஜேந்திரன்,பத்மனாபன்,குமாா்,நந்தகுமாா் ஸ்தபதி, பத்மனாபன்,வேல்முருகன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவா் ப.பன்னீா் செல்வம் கூறியது: சுமாா் 70 அடி உயரத்தில் தோ் வடிவமைக்கப்பட்டு காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். ஈரோடு மாவட்டம் கோபி திருஞானசம்பந்தா் திருமடத்தின் ஆதீனம் சிவாக்கர தேசிக சுவாமிகள், கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபி என்.கிருபாகரன், ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி கே.சண்முகம், அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, செயல் அலுலா் பெ.கதிரவன் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனா்.
விழாவில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் வீதிகளில் கோலமிட்டு வரவேற்றல், ஏராளமான சிவ வாத்தியங்கள் இசைத்தல், பரதநாட்டியம், முழுநாள் அன்னதானம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


