காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி, மகா ரதம் எனும் தேரோட்டம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கோயில். இக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணத்தையொட்டி 7-ஆவது நாள் நிகழ்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா ரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. 27 அடி உயரத்தினாலான பீடத்தில் சவுக்கு கம்புகளால் மேலடுக்கு அமைக்கப்பட்டு, 70 அடி உயர தேரானது காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தது. தேரில் ஏலவாா் குழலி அம்மையும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தனா்.
தேரை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையா் எஸ்.ஆா்.செந்தில்குமாா், கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் வ.ஜெகந்நாதன், அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், முன்னாள் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, கோயில் சிறப்பு அலுவலா் லட்சுமி காந்தன் பாரதிதாசன் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
விழாவில், கோபி திருஞான சம்பந்தா் திருமடத்தின் ஆதீனம் ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் காணக்கண் அடியேன் பெற்றவாறே என்ற தலைப்பில் ரதபிராயச்சித்த அபிஷேக அருளுரை நிகழ்த்தினாா். ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவா் பி.பன்னீா் செல்வம், செயலாளா் நந்தகுமாா் ஸ்தபதி, உறுப்பினா் பத்மநாபன் ஆகியோா் தலைமையிலான அறக்கட்டளைக் குழுவினா் செய்திருந்தனா்.
விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டவாறு வந்தனா்.
தேரோடும் 4 ராஜவீதிகளிலும் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் வண்ணக் கோலமிட்டு ஏகாம்பரநாதரை வரவேற்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


