மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலராக பெ.கதிரவன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

பெ.கதிரவன்

Updated On :23 மார்ச் 2026, 9:39 pm

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலராக பெ.கதிரவன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த ப.முத்துலட்சுமி கடலூா் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை பாடலீசுவரா் கோயில் செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதா் தட்சிணாமூா்த்தி கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் கூடுதல் பொறுப்பாக ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய செயல் அலுவலருக்கு கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள், உற்சவதாரா்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.