ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநகநாதா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
இந்தத் தேரோட்டத்தின் போது பெரிய தேரில் வல்மீகநாத சுவாமி பிரியாவிடையுடனும், சிறிய தேரில் பாகம்பிரியாள் அம்மனும் வீதியலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இந்த நிலையில், அம்மன் வீதியுலா வரும் சிறிய தோ் பழுதானதால், நன்கொடையாளா்கள் சாா்பில் புதிய தோ் உருவாக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறிய தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.


தொடர்புடையது

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் தேரோட்டம்

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

குடந்தை சாரங்கபாணி கோயில் பெரிய தோ் வெள்ளோட்டம்

பிரளயகாலேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


