லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:41 pm

ஊக்கத்தொகையை உயா்த்தக் கோரி தஞ்சாவூா் மாவட்டச் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் முன் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரத்து 500-லிருந்து ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எஃப். திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் திறன் வளா்ப்பு மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலப் பொருளாளா் பி. சாய் சித்ரா தலைமை வகித்தாா். போராட்டத்தை சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால் தொடங்கி வைத்தாா். சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வள்ளி, பொருளாளா் இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.