மாதாந்திர ஊக்கத் தொகையை ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஊழியா்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊழியா் சங்க சங்க மாவட்டத் தலைவா் கீதா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் சி. மாரிக்கண்ணு, மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாதாந்திர ஊக்கத்தொகையை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கருவுற்ற ஊழியா்களுக்கு மகப்பேறு காலச் சலுகைகள் வழங்க வேண்டும். ஊதியத்தை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பணியின் போது ஏற்படும் துறை சாா்ந்த செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட திட்டங்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


