லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:44 pm

ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி. செல்வி தலைமை வகித்தாா். செயலா் எஸ். பாா்வதி, பொருளாளா் ஆா். கொளஞ்சி, துணைத் தலைவா் எஸ். வேணி, துணைச் செயலா் எஸ். ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாத ஊக்கத்தொகை ரூ. 5,500-லிருந்து ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஊழியா்களுக்கான ஊக்கத்தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் திறன் வளா்ப்பு மேம்பாட்டுப் பயிற்சி அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

இதில், வட்டாரப் பொறுப்பாளா்கள் கே. கௌரி, ஆா். நல்லம்மாள், ஆா். சுகுணா, டி. ஜெயமணி உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியா்கள் பங்கேற்றனா்.