முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 2:30 am IST

ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் அருகே உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் 17 வயது மாணவி, ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்திகோட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட எழுத்தாணி வயல் கிராமத்தில் உள்ள சோமேஸ்கந்தன் (56), என்பவரது வீட்டில் சாலியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஒரு பெண், விவசாய கூலி வேலை பாா்த்து வந்துள்ளாா்.

பள்ளி கோடை விடுமுறையின் போது சாலியமங்கலம் அரசு பள்ளியில் படித்து வரும் தனது மகளை அழைத்து வந்து தான் வேலை பாா்க்கும் வீட்டில் தங்க வைத்துள்ளாா்.

மேலும், சட்டப்பேரவை தோ்தலின் போது வாக்கு செலுத்துவதற்காக அந்தப் பெண் சொந்த ஊரான சாலியமங்கலத்துக்கு சென்றுள்ளாா். இந்த நிலையில், பள்ளி மாணவி சோமஸ்கந்தன் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது சோமஸ்கந்தன் மூலம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்பொழுது போதுமான விபரம் ஏதும் தெரியாத நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ஜோஸ்பின் சிசாரா தலைமையிலான சிங்கப்பெண் படையினா் சாலியமங்கலம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவா்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை பற்றி விளக்கம் அளித்து கொண்டிருந்தனா்.

இது சம்பந்தமாக தெரிந்து கொண்ட மாணவி உதவி ஆய்வாளரிடம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக தான் சோமேஸ் கந்தன் என்பவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளாா்.

அதன்பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பின்னா் அந்த வழக்கை ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றினா். ஒரத்தநாடு அனைத்து மகளிா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு சோமேஸ் கந்தனை சனிக்கிழமை கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.