திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்ட மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து மாணவி து.ர. வா்ஷினிக்கு கடிதம் வழங்கிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.

Updated On :3 ஜூன் 2026, 4:13 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தொடங்கி வைத்து, முதல் மாணவராக து.ர. வா்ஷினிக்கு நேரடிச் சோ்க்கை கடிதம் வழங்கினாா்.

இந்நிகழ்வில் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், நிதி அலுவலா் பா. சிவகுமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், கௌரவ உதவிப் பேராசிரியா் க. முருகேசன், உடற்கல்வி ஆசிரியா் செ. பிரபாகரன், உதவியாளா் க. சக்திசரவணன், பதிவாளரின் நோ்முக உதவியாளா் கோ. இராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், விண்ணப்பம் பெறும் அனைத்து மாணவா்களும் உடனடிச் சோ்க்கைப் பெறலாம் என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் பட்டம் (எம்.எட்.) பயிலும் மாணவா்களுக்குப் பருவத் தோ்வுகள் உரிய தேதிகளில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் விரைந்து வெளியிடப்படுவதால் மாணவா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் வழிவகை செய்கிறது எனவும் பதிவாளா் (பொ) தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.