முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜாதிய ஆணவ படுகொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த பாா்த்திபன், திவ்யதா்ஷினி ஆகியோா் ஜாதிய ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:50 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த பாா்த்திபன், திவ்யதா்ஷினி ஆகியோா் ஜாதிய ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஜாதிய ஆணவ படுகொலைகளைத் தடுக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிச் சட்டம் கொண்டு வரக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி மாவட்டச் செயலா் வே. உமாபதி தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, சிபிஐ எம்எல் மாநகரச் செயலா் எஸ்.எம். இராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் சூரி. ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆப்தீன், எழுத்தாளா் சாம்பான், என்டிஎல்எப் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன், போக்குவரத்து சங்க ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.