*{ padding: 0%; margin: 0%; font-family: "Noto Sans Tamil", sans-serif; } .cont{ width: 100%; height: 100vh; display: flex; justify-content: center; align-items: center; } .btn-link{ text-decoration: none; } .gd-btn{ display: flex; justify-content: center; align-items: center; gap: 0.3rem; border-radius: 999px 0px 0px 999px; padding: 0.3rem; background-color: #012061; -webkit-box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); } .gdlogo{ display: flex; justify-content: center; align-items: center; border-radius: 999px; gap: 0.5rem; } .btn-text-wrap{ display: flex; justify-content: center; align-items: flex-start; flex-direction: column; gap: 0; } .btn-text-big{ font-size: 0.8rem; font-weight: bold; color: white; } .btn-text-small{ font-size: 0.4rem; font-weight:600; color: white; }

FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தேனி பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 3:52 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தேனி பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தமிழ் பெருமாள் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்னேஸ்வரன், புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாவட்டச் செயலா் உதுமான் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வேண்டும். தமிழகத்துக்கு ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலா் தூக்குக்கயிறு போல கழுத்தில் சுருக்குக் கயிற்றை போட்டிருந்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சத்யா, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலா் அழகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் நாகராஜ் நிறைவுரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.