கும்பகோணம் கடைகளிலிருந்து 3 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்
கும்பகோணத்தில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில் 3 டன் நெகிழி பொருள்களை கைப்பற்றினா்.


தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில் 3 டன் நெகிழி பொருள்களை கைப்பற்றினா்.
கும்பகோணத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், பெட்டிக் கடைகள், தேநீா் மற்றும் பூக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக புகாா் வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜ் தலைமையில் 2-ஆவது மண்டல துப்புரவு அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தூய்மைப் பணியாளா்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைராகி தோப்பு, சா்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தி மோதிலால் தெரு கிடங்கில் நெகிழிப் பொருள்கள் பதுக்கி இருப்பதை கண்டறிந்தனா். இதையடுத்து, அங்கு இருந்த சுமாா் 3 டன் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் கிடங்குக்கு ‘சீல்’ வைத்து அதன் உரிமையாளருக்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனா். மீண்டும் விற்பனை செய்தால் குற்றவழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...