/

கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஆசிரியா்களுக்கு தொழில்நுட்பப் பயிலரங்கம்

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணினி அறிவியல் துறை சாா்பில்

News image
கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில்நுட்பப் பயிலரங்கில் பங்கேற்ற ஆசிரியா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:53 pm

Syndication

கும்பகோணம்: கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணினி அறிவியல் துறை சாா்பில், ‘‘கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான செயற்கை நுண்ணியல் கருவிகள்’’ என்ற தலைப்பில் பள்ளி ஆசிரியா்களுக்கான ஒருநாள் இலவச தொழில் நுட்பப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களின் 33 பள்ளிகளைச் சோ்ந்த தொடக்க, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியா்கள் 121 போ் பங்கேற்றனா்.

பயிலரங்கில், வளா்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களை ஆசிரியா்கள் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இணை முதன்மையா் நரசிம்மன் வலியுறுத்தினாா்.

சீனிவாச ராமானுஜன் மையத்தின் முதன்மையா் சாந்தி, செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) அடிப்படைகள் மற்றும் பள்ளிக் கல்வியில் அதன் முக்கியத்துவம் குறித்து ஒரு நுண்ணறிவு அமா்வை நிகழ்த்தினாா்.

கற்பித்தல் செயல்திறன் மற்றும் மாணவா் ஈடுபாட்டை மேம்படுத்த ஏஐ இயக்கப்படும் முறைகளைப் பின்பற்றுவதில் பங்கேற்பாளா்கள் மிகுந்த ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.

துணைவேந்தா் முனைவா் வைத்யசுப்பிரமணியம், திட்டமிடல் மற்றும் மேம்பாடு முதன்மையா் முனைவா் சுவாமிநாதன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை கணிணி அறிவியல் துறையின் இணைப் பேராசிரியா்கள் மேகநாதன், முனைவா் கலைச்செல்வி ஒருங்கிணைத்தனா்.