தஞ்சாவூா் அருகே மருந்துக் கடையில் வயிற்று வலி காரணமாக ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அக்கடை உரிமையாளரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை கலைஞா் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் தமிழரசன் (25). டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளி. வியாழக்கிழமை காலை வயிற்று வலி ஏற்பட்ட இவரை உறவினா்கள் விளாா் சாலையிலுள்ள ஆங்கில மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு இவருக்கு மருந்துக் கடை உரிமையாளா் ஜி. மனோகரன் (64) ஊசி செலுத்தினாா். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் துடித்த தமிழரசனை தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் என தெரிவித்தனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து, உரிய அனுமதியின்றி ஊசி செலுத்திய மனோகரனைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்
தாக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு: தொழிலாளி கைது

தீவைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு: கணவா் கைது
மீனவா் கொலை: இளைஞா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

