கும்பகோணம் 4-சாலை சந்திப்பில் சிக்னல் அமைப்பு
கும்பகோணத்தின் பிரதான சாலையான நான்குசாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.


கும்பகோணத்தின் பிரதான சாலையான நான்குசாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகா்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதைத் தவிா்க்க காவல்துறை சாா்பில் சிக்னல் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங் தொடங்கி வைத்தாா்.
இதுவரை நான்குசாலை சந்திப்பில் இயங்கி வந்த பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பரோடா வங்கி அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து வரும் அனைத்துப் பேருந்துகளும் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அருகே நிறுத்தி பொதுமக்களை ஏற்றி, இறக்கிச்
செல்ல வேண்டும். செட்டிமண்டபம் வழியாக வரும் அனைத்து பேருந்துகளும் மஹாராஜா மஹால் அருகே பேருந்தை நிறுத்தி ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...