டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சென்னை: மத்திய கைலாஷ் சந்திப்பில் ‘எல்’ வடிவ மேம்பாலம் இன்று திறப்பு!

மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

News image
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு. உடன் துறை செயலா் இரா.செல்வராஜ் உள்ளிட்டோா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 3:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இப்பாலம் இன்று (பிப். 15) திறக்கப்படவுள்ளது. இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சா்தாா் படேல் சாலையில் இருந்து துவங்குகிறது. இந்த 2 சாலைகளும் சந்திக்கும் இடம் ‘டி’ வடிவலானது. இச்சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு, சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் எல் வடிவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ‘எல்’ வடிவ மேம்பாலத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.