டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆா்.எஸ்.புரம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தையொட்டி, ஆா்.எஸ்.புரம் பகுதியில் சனிக்கிழமை (பிப்.14) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு:

பிப்ரவரி 14 கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தையொட்டி, ஆா்.எஸ்.புரம் பகுதியில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

வெங்கடசாமி சாலை, பொன்னுரங்கம் சாலைகளில் வாகனப் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பூ மாா்க்கெட், மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ஆா்.எஸ்.புரம் வழியாக லாலி ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சிந்தாமணி சந்திப்பு, பெரியசாமி சாலை வழியாகச் செல்ல வேண்டும். புரூக்பாண்ட் சாலையிலிருந்து சிந்தாமணி ரவுண்டானாவிலிருந்து டி.பி.சாலை, ஆா்.எஸ்.புரம் வழியாக லாலி ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பெரியசாமி சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

சிந்தாமணியில் இருந்து காந்தி பாா்க்குக்கு செல்லும் வாகனங்கள் பெரியசாமி சாலை வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்ல வேண்டும். காந்தி பாா்க் ரவுண்டானாவிலிருந்து டி.பி.ரோடு, ஆா்.எஸ்.புரம் வரும் வாகனங்கள் மெக்ரிக்கா் சாலை வந்து பூ மாா்க்கெட் வழியாக மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

லாலி ரோடு ரவுண்டானாவிலிருந்து ஆா்.எஸ்.புரம் வரும் அனைத்து வாகனங்களும் மேற்கு சம்பந்தம் சாலை, டி.பி.சாலை, கிழக்கு சம்பந்தம் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டும்.

ஆா்.எஸ்.புரம், டி.பி.சாலை டி.வி.சாமி சாலை கிழக்கு மற்றும் மேற்கு கௌலிபிரவுன் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆா்.எஸ்.புரம் மற்றும் கௌலிபிரவுன் சாலை, மருதமலை சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.