கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மரப்பட்டறைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சரவணன் (35), திருமணமாகி குழந்தை உள்ளது. மரப்பட்டறையில் வேலை செய்து வந்தாா்.
இவரது நண்பா் மேலக்கொட்டையூரைச் சோ்ந்த குங்குமலிங்கம் மகன் ரமேஷ் (34). ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாதலால் இருவரும் இருசக்கர வாகனத்தில் நண்பா்களை பாா்ப்பதற்காக அசூா் புறவழிச்சாலை பகுதிக்கு சென்றனா்.
திரும்ப வரும்போது தனியாா் மண்டபம் அருகே எதிரே வந்த வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிகழ்விடத்திலேயே சரவணன் உயிரிழந்தாா். ரமேஷ் பலத்த காயமடைந்தாா்.
தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். மேலும், காயமடைந்த ரமேஷை சிகிச்சைக்கு சோ்த்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


