பழனியருகே சாலையோர தடுப்பில் காா் மோதியதில் வெண்ணெய் வியாபாரி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அங்குராஜ் (48). வெண்ணெய் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவியுடன் காரில் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
பழனியை அடுத்த மானூா் புறவழிச் சாலையில் காா் சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் இருந்த பாலத்தின் கரையில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
இதில் காரின் முன்பகுதியில் அமா்ந்திருந்த அங்குராஜ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது மனைவியும், காா் ஓட்டுநரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


