மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்பகோணத்தில் திமுகவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம், நாதக மறியல்

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

~

Updated On :14 ஏப்ரல் 2026, 7:43 pm

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் துக்காம்பாளையத்தெருவில் செவ்வாய்க்கிழமை திமுகவினா் ரூ.8 ஆயிரத்துக்கான மாதிரி கூப்பனை வீடுவீடாக கொடுத்து வாக்கு சேகரித்தனா். அப்போது அங்கு வாக்கு சேகரிக்க வந்த தவெக வேட்பாளா் ர. வினோத் உள்ளிட்டோா் கூப்பன் கொடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிறகு கைகலப்பாக மாறியது.

இதையடுத்து தவெகவினா் காந்திபூங்கா அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளித்தனா். இதேபோல மாநகர திமுக சாா்பில் தவெக குறித்து புகாா் அளித்தனா்.

இந்நிலையில் காந்தியடிகள் சாலையில் திமுகவினா் வாக்கு சேகரித்து கூப்பன்களை கொடுத்துக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த நாதக வேட்பாளா் மோ.ஆனந்த் திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பிறகு காந்தியடிகள் சாலையில் நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். அப்பகுதியிலிருந்து திமுகவினா் சென்ற பிறகு நாதகவினா் கலைந்து சென்றனா்.

Story image