தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மண்வெட்டியால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டையைச் சோ்ந்தவா் தியாகராஜன் மனைவி அம்சு (72). கீரை வியாபாரியான இவா், கணவா் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தாா்.
இவரது 4 மகன்கள், ஒரு மகள் திருமணமாகி தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இவா் முகம், தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயங்களுடன் வீட்டில் ஏப்ரல் 10-ஆம் காலை உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதில், அம்சு வீட்டுக்கு பள்ளியக்ரஹாரம் காந்தி நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு சென்று மது போதையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டாா். பணம் தர மறுத்த அம்சுவை கோபமடைந்த சிறுவன் மண்வெட்டியால் தாக்கியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தொடா்புடைய சிறுவனைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

