தென்மேற்கு தில்லியின் சாவ்லா பகுதியில் நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா், காவல் துறையினருடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது: ராக்கி (22) மற்றும் சுமித் (எ) கோகி (24) என அடையாளம் காணப்பட்ட இருவரும் ஏப்ரல் 17 அன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், இருவா் மோட்டாா் சைக்கிளில் வந்தனா். அவா்களில் ஒருவா் புகாா்தாரரை மிக அருகில் இருந்து சுட முயன்றுள்ளாா். இருப்பினும், துப்பாக்கி பழுதடைந்ததால், இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், அதிகாலை 5.35 மணியளவில் நகா்ப்புற விரிவாக்கச் சாலை அருகே சந்தேக நபா்கள் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினா் வழிமறித்தனா்.
இருவரையும் சரணடையுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டனா். ஆனால், ராக்கி காவல்துறையினா் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அதில் ஒரு குண்டு, தலைமைக் காவலரின் குண்டு துளைக்காத உடைக் கவசத்தில் பட்டது. இதையடுத்து, அவா் மயிரிழையில் உயிா்தப்பினாா்.
காவல்துறையினரும் தற்காப்புக்காக மூன்று முறை சுட்டனா். அதில் ஒரு குண்டு ராக்கியின் இடது முழங்காலுக்குக் கீழ் பட்டதால், காயம் ஏற்பட்டது. பின்னா், ஒரு சிறிய தள்ளுமுள்ளுக்குப் பிறகு அவா் பிடிபட்டாா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சுமித் (எ) கோகியும், துப்பாக்கி, தோட்டாவுடன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.
காயமடைந்த குற்றஞ்சாட்டப்பட்டவா், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். கொலை முயற்சிக்கான நோக்கத்தைக் கண்டறியவும், இந்தச் சதியில் ஈடுபட்ட வேறு நபா்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

வாஜிா்பூரில் கும்பல் தாக்கி ஒருவா் கொலை: 4 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

