புதுக்கோட்டை மாவட்டம், குன்றண்டாா்கோவில் ஒன்றியம், பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருவிழாவையொட்டி கந்தா்வக்கோட்டையிலிருந்து சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன.
பெரம்பூா் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 17)தேரோட்டம் நடைபெறும். மேலும் பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவா்.
இதற்காக காட்டு நாவல், மெய்குடிபட்டி, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, மருங்கூரணி, நெப்புகை, மட்டாங்கால், மோகனூா், வடுகப்பட்டி, கோமாபுரம், வண்டையன் பட்டி ஆகிய பகுதியிலிருந்து பக்தா்கள் ஏராளமானோா் செல்வதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழக கந்தா்வகோட்டை கிளை மேலாளா் சக்திவேலிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி கந்தா்வகோட்டையில் இருந்து பெரம்பூருக்கு சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் சென்று வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










