இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மாலத்தீவில் இறந்த மகன்: விசாரணை நடத்தக் கோரி பெற்றோா் கோரிக்கை

மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்க வந்த அவரது உறவினா்கள். ~திவாகரன்

Updated On :13 மே 2026, 1:11 am IST

மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஆண்டான் தெரு பகுதியில் வசித்து வருபவா் வே. கருப்பையா. இவரது இரண்டாவது மகன் திவாகரன் (30). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாலத்தீவிலுள்ள தனியாா் நிறுவனத்தின் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

திங்கள்கிழமை இரவு, திவாகரன் தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து பேசிய அவருடன் பணியாற்றும் நபா், திவாகரன் திடீரென இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திங்கள்கிழமை இரவு எங்களுடன் நல்ல முறையில் பேசி உறங்கச் சென்ற மகன் திடீரென இறந்ததாகக் கூறுவதில் சந்தேகம் இருக்கிறது.

எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நீதியைப்பெற்றுத் தர வேண்டும். திவாகரனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.