விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணியை விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியருமான கோகுல்சிங் தொடங்கி வைத்து சென்றாா்.
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஆவூா் பிரிவு சாலையில் இருந்து தொடங்கி மாத்தூா் ரவுண்டானா வரை பேரணி சென்று, அங்கு அரசுப் பள்ளி எதிரே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா்.
நிகழ்வில் குளத்தூா் வட்டாட்சியா் விஸ்வநாதன், மண்டலத் துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்துவேல் (மாத்தூா்), ஜோதி பிரகாஷ் (குமாரமங்கலம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


