தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி மேம்பாலம் வழியாகச் சென்று அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.
இதில், 150-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியா் சௌமியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


