100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா், இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை நடைபெற்றது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி, திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவா் ஆ.முருகநாதன், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் பிரேமலதா, செயலாளா் டாக்டா் தங்கராஜ், பொருளாளா் டாக்டா் கவிதாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



