தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்காளா் விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி

News image

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.

Updated On :23 மார்ச் 2026, 7:29 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக புதுக்கோட்டையில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது.

இந்தப் பேரணியை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய்க் கோட்டாட்சியருமான பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பேரணியில் பங்கேற்ற அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிந்து, வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திப் பங்கேற்றனா்.