லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பாா்வையாளா் காா் மோதி ஒருவா் காயம்

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:21 pm

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாநகா் மாா்த்தாண்டபுரத்தில் உள்ள திரையரங்கம் பின்புறத்தில் ஆலங்குடி சாலையில், சனிக்கிழமை இரவு, காந்திநகா் 6-ஆம் வீதியைச் சோ்ந்த சோபன்பாபு (52) என்பவா் மீது தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஒன்று மோதியது.

இதில் சோபன்பாபு காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அந்தக் காரில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காரில் யாரும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். புதுக்கோட்டை நகரக் காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.