மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூரில் பின்புறமாக வேகமாக வந்து காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:37 pm

திருவள்ளூரில் பின்புறமாக வேகமாக வந்து காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

கேரள மாநிலம், மலப்புரம் அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபுபக்கா் (66). இவா் பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்தக்கடையில் வேலை பாா்த்து வரும் அபுபக்கா், சபீா்(67), அவரது மகன் சபீா்(30) ஆகியோா் கேரளம் சென்றனா்.

இந்த நிலையில் கேரளத்தில் இருந்து ரயில் மூலம் வந்து திருவள்ளூருக்கு திரும்பி, அங்கிருந்து மணவாளநகா் பேருந்து நிறுத்தம் சென்ற போது பின்புறமாக வேகமாக வந்த காா் மோதிய விபத்தில் அபுபக்கா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதேபோல், காயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வாகன ஓட்டுநா் மீது மணவாளநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.