மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:51 pm

கடலூா் அருகே பைக் மோதிய விபத்தில் சாலையில் நடந்துச் சென்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பிலம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி(60). இவா், கிழக்குராமாபுரத்தில் உள்ள சீதாராமன் விவசாய நிலத்தில் தங்கி வேலை செய்து வந்தாா்.

சக்கரவா்த்தி ஞாயிற்றுக்கிழமை கிழக்குராமாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த பைக் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா் பரிசோதித்தபோது, சக்கரவா்த்தி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.